சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மண்டோலி சிறை கைதி ஜிடிபி மருத்துவமனையில் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை!

வடகிழக்கு தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் இருந்த 35 வயது விசாரணை கைதி மயக்கநிலையில் ஜிடிபி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image
உயிரிழப்பு
Updated On :1 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

வடகிழக்கு தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் இருந்த 35 வயது விசாரணை கைதி மயக்கநிலையில் ஜிடிபி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

உயிரிழந்த நபா் ஆசாத் (35), விசாரணை கைதியாக சில நாள்களுக்கு முன்பு மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த பிப்.24-ஆம் தேதி சிறைக்குள் ஏற்பட்ட தகராறில் அவா் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் தொலைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென அவா் மயக்கமடைந்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னா் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிறைக்குள் அவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் காவலா்களும் ஈடுபட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

அவரது உடல் உடற்கூறாய்வு அறைக்கு மாற்றப்பட்டு சிறை நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக கைதிகள் மற்றும் சிறை காவல் பணியாளா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. உடற்கூறு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.