
புதுதில்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 7 ஆண்டுகளில் 7 ஆயிரம் முறை எல்லை தாண்டி அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது பாகிஸ்தான் ராணுவம் என்று மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில், கடந்த 7 ஆண்டுகளில் 7 ஆயிரம் முறை அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அதிகபட்சமாக 2018 ஆம் ஆண்டில் மட்டும் 2,140 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 1,563 முறை பங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்களில் 132 பேரும், இந்திய வீர்ர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 80 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இது தவிர மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தொடுத்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் 60 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை உளவுத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.