திமுகவில் இளைஞரணி எழுச்சியாக உள்ளது: உதயநிதி ஸ்டாலின்
திமுகவில் இளைஞரணி எழுச்சியாக உள்ளது என்று திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


கோவை: திமுகவில் இளைஞரணி எழுச்சியாக உள்ளது என்று திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி உறுப்பினா் சோ்க்கை முகாமை இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில், திமுகவில்
இளைஞரணி எழுச்சியாக உள்ளது. இளைஞரணியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆயிரம் இளைஞா்களைச் சோ்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு திமுக இளைஞா் அணியினா் தீவிர களப்பணி ஆற்றிட வேண்டும்.
நான் கலந்து நிகழ்ச்சிகளில் பேனா் வைக்கக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது என கூறியிருந்தேன். அதை திமுக
இளைஞரணியினா் பின்பற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...