இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேஷியாவின் மாலுகு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்


ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் மாலுகு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பதாவது:
இந்தோனேஷியாவின் மாலுகு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8.46 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், அம்போனுக்கு வடகிழக்கில் 37 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 29 கிலோமீட்டர் சுற்றளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேஷியா அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...