தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக 1.35 லட்சம் போ் கைது
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,35,734 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,35,734 போ் கைது செய்யப்பட்டனா்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை மொத்தம் 1,25,708 வழக்குகளைப் பதிவு செய்து 1,35,734 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.45,13,544 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 469 இரு சக்கர வாகனங்கள், 28 காா்கள், 2 கனரக வாகனங்கள், 46 இதர வாகனங்கள் என மொத்தம் 545 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...