பெரியஓபுளாபுரத்தில் 2000 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியான பெரிய ஓபுளாபுரத்தில் ஊராட்சி மற்றும் ஓ.பி.ஜி பவர் பிளாண்ட் சார்பில் 1000 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பெரியஓபுளாபுரத்தில் 2000 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியான பெரிய ஓபுளாபுரத்தில் ஊராட்சி மற்றும் ஓ.பி.ஜி பவர் பிளாண்ட் சார்பில் 1000 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வரும் நிலையில் பெரியஓபுளாபுரம்  ஊராட்சியில் ஊராட்சி மன்றம், ஓபிஜி பவர் பிளாண்ட் இணைந்து 2000குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள்.

நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் இன்பவள்ளி, பெரிய ஓபுளாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் முல்லைவேந்தன், வார்டு உறுப்பினர் ராஜா,அதிமுக நிர்வாகி டி.ஏழுமலை , வருவாய் ஆய்வாளர் ரதி, கிராம நிர்வாக அலுவலர் ஆமோஸ், ஊராட்சி செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிபூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி குணசேகர், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயச்சந்திரன் பங்கேற்று 2000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்கள்.

பெரியஓபுளாபுரம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில்- இந்நிலையில் பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தலைவர் முல்லைவேந்தன் ஏற்பாட்டில் எளாவூர் ரயில்நிலையத்தில் தங்கி வரும் ஆதரவற்றோருக்கும், ஏழை எளியோருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்று எளாவூர் ரயில் நிலையத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார். மேலும் ரயில்நிலையத்தை ஒட்டி வசித்து  வரும்100 ஏழை எளியோர்கள் குடும்பத்திற்கு அரிசி, மளிகை, சோப்பு போன்றவைகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com