சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குலதெய்வ வழிபாட்டிற்காக வந்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு: எம்.எல்.ஏ நிதியுதவி 

குலதெய்வ வழிபாட்டிற்காக வந்தவர்கள்,சொந்த ஊர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 7:56 am

DIN

குலதெய்வ வழிபாட்டிற்காக வந்தவர்கள்,சொந்த ஊர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

சேலம் மாவட்டம் சீனிபட்டியை சேர்ந்தவர்கள் 11 பேர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலில் உள்ள தங்களது குலதெய்வமான முத்துமாரியம்மன் கோவிலுக்கு தங்களின் நேர்த்திகடன்களை செலுத்துவதற்காக ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னர் வந்தனர். 

திடீரென ஊரடங்கு என அறிவிக்கபட்ட நிலையில் தனது சொந்த ஊர் செல்ல முடியமால் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு தங்கும் இடவசதி, மூன்று வேலையும் உணவுகள் அனைத்து சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் வழங்கி வந்தார்.

இந்நிலையில், வெள்ளிகிழமை 11 பேரை நேரில் சந்தித்த ராஜவர்மன் அவர்களுக்கு நிதியுதவி அளித்து,சாத்தூரில் மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் தனது சொந்த செலவில் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகளை எம்.எல்.ஆர்.ராஜவர்மன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.