சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,065 பேர் பலி; பலி எண்ணிக்கை 54,265-ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 2,065 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 8:02 am

DIN


அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 2,065 பேர் பலியாகியுள்ளனர். 

உலக நாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ள உயிர்க்கொல்லி நோய்த்தொற்றான கரோனாவுக்கு இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், இன்றளவும் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். கரோனாவுக்கு வல்லரசு நாடான அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவில் நோய்த்தொற்றால் சனிக்கிழமை ஒரே நாளில் 2,065 பேர் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 54,265 -ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 30,570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரத்து 896 -ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தோற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,18,162 -ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.