சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிகாரில் ஆறு மாத குழந்தைகள் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி 

பிகார் மாநிலத்தில் மேலும் புதிதாக 12 பேருக்கு நோய்த்தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 10:13 am

DIN


பாட்னா: பிகார் மாநிலத்தில் மேலும் புதிதாக 12 பேருக்கு நோய்த்தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. 

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு உடல் நலப்பிரச்னைகளுக்காக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் லாலு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் லாலுவின் வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது லாலு உள்பட மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிா்ச்சியை அளித்துள்ளது.

இதையடுத்து, அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா்கள் உள்பட பணியாளா்கள் அனைவருக்கும் விரைவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனிடையே, லாலுவுக்கு சிசிச்சையளித்த மருத்துவா்களில் ஒருவா் கரோனா சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். 

இந்நிலையில்,  பக்சர் மாவட்டத்தில் உள்ள நியூ போஜ்பூரில் புதிதாக 6 மாத குழந்தைகள், பெண்கள் உள்பட 12  பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 7 பேர் ஆறு மாத குழந்தைகள் மற்றும் பெண்கள், 5 பேர் ஆண்கள். மாநிலத்தில் இதுவரை நோய்த்தொற்றுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர், 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.