சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனா: உலக அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது 

உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரிண் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 5:52 am

DIN

ஜெனீவா: உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரிண் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்திக் கொண்டே வரும் நிலையில் தொற்று தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக அளவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 32,20,847 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,  2,28,239 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் 10,64,572 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 61,669 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்திறது. 

இதற்கு அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மோசமான நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் முறையே 2,36,899 மற்றும் 2,03,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை முறையே 24,275 மற்றும் 27,682-ஆக உள்ளது.  

பிரான்சில் 1,66,420 பேரும், பிரிட்டனில் 1,65,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை முறையே 24,087 மற்றும் 26,097-ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.