பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி
Updated On :1 ஆகஸ்ட் 2020, 12:52 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட்.1: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜதுரை (38 வயது) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 

இன்று (சனிக்கிழமை) பணியாளர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வேனை ஓட்டி சென்றார். 

கரிசல்குளம் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

தகவலறிந்து நத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டுநரின் பிரேதத்தை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.