திரிபுரா: மாடியில் இருந்து குதித்து கரோனா நோயாளி தற்கொலை
திரிபுராவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துக் கொண்டார்.


அகர்தலா, ஆகஸ்ட் 1: திரிபுராவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துக் கொண்டார்.
தெற்கு திரிபுரா மாவட்டம் முஹுரிபூர் கிராமத்தில் வசிக்கும் 31 வயதான இவர், விஷம் குடித்ததாகக் கூறி அங்குள்ள அரசு கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.
இதற்கிடையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை மருத்துவமனையின் மூன்றாவது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்த ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ராகேஷ் படோரி கூறுகையில்,
அந்த நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...