டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி: 1 லட்சம் லட்டுகளை வழங்கும் அறக்கட்டளை

ராமர் கோயில் பூமி பூஜைக்கு வருகைபுரியும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் லட்டுகளை பாட்னா மகாவீர் அறக்கட்டளை விநியோகம் செய்ய உள்ளது.

News image
ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி: 1 லட்சம் லட்டுகளை வழங்கும் அறக்கட்டளை
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

அயோத்தி: ராமர் கோயில் பூமிபூஜைக்கு வருகைபுரியும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் லட்டுகளை பாட்னா மகாவீர் அறக்கட்டளை விநியோகம் செய்ய உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாளை (புதன்கிழமை) பூமிபூஜை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர்.

இதனையொட்டி பூமி பூஜைக்காக வரும் பக்தர்களுக்கு லட்டுகளை வழங்க பாட்னாவின் மகாவீர் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. 

இது குறித்து அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் ஆச்சார்யா கிஷோர் பேசியதாவது, ராமர்கோயில் பூமிபூஜைக்காக வரும் பக்தர்களுக்கு ஒருலட்சம் லட்டுகளை தயாரித்து வருகிறோம். இதில் 51,000 லட்டுகள் 
ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஏற்கனவே வழங்கப்பட்டது. எஞ்சிய லட்டுகள்  பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் வைத்து வழங்குவோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.