பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலை தடுப்பில் பைக் மோதியதில் ஒருவர் சாவு

திருவள்ளூர் அருகே சாலை தடுப்பின் மீது பைக் மோதி தூக்கி வீசியதில் தலையில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக மப்பேடு காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி
Updated On :5 ஆகஸ்ட் 2020, 7:07 am

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலை தடுப்பின் மீது பைக் மோதி தூக்கி வீசியதில் தலையில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக மப்பேடு காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மப்பேடு காவல் நிலைய காவலர்கள் தரப்பில் புதன்கிழமை கூறியதாவது: திருவள்ளூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயபால்(43). இவர், கடந்த ஓராண்டாக வேலை நிமித்தம் காரணமாக காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இதனிடையே வாடகை வீட்டிற்கு மின்கட்டணம் செலுத்திவிட்டு, மாலையில் தனது தாயாரை பார்ப்பதற்காக திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு நோக்கி வரும் போது எதிர்பாரத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ஜெயபால் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவர் சகோதரர் ஜெயபிரகாஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.