டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர்கோயில் பூமிபூஜை: தில்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து புறப்பட்டார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

புதுதில்லி: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து புறப்பட்டார்.

தில்லியில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் புறப்பட்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் லக்னெள வந்தடைய உள்ளார். பின்னர் அங்கு இருந்து அயோத்திக்கு வருகை புரிய உள்ளார். அயோத்தியில் முதலில் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார்.  பூமி பூஜையின் ஒரு நிகழ்வாக பகல் 12 மணிக்கு ராம் லல்லா வழிபாடு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் பூமி பூஜை நடைபெறும் இடைத்தை பிரதமர் மோடி சென்றடைகிறார். அங்கு ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமிபூஜையை தொடக்கி வைக்க உள்ளார். பூமி பூஜையின் நினைவாக ஸ்ரீ ராமஜென்மபூமி மந்திர் என்ற தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

பூமிபூஜை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 175 சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹத் நிருத்திய கோபால்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.