உ.பி : சாலை விபத்தில் 2 பேர் பலி
நசிர்பூர் கிராமம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.


காசிப்பூர் (உ.பி.), ஆகஸ்ட் 5: நசிர்பூர் கிராமம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
காசிப்பூர் மாவட்டம் நசிர்பூர் கிராமம் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆரிப் (வயது 19) மற்றும் அவரது உறவினர் காலித் (19) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...