கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் இளைஞர் சாவு
கந்தர்வகோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கந்தர்வகோட்டை ஒன்றியம் , பெரியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் மகன் ராஜகோபால் (23) , சின்னப்பா மகன் அருள் பாண்டியன் (21) இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்கிழமை இரவு பட்டுக்கோட்டை , கந்தர்வகோட்டை சாலையில் வேம்பன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தாமலையைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிதம்பரம் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துள்ளார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனதில் படுகாயமடைந்த மூவறையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி அருள் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...