தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இளைஞர் சுட்டுக்கொலை

மேற்குவங்கத்தின் கூச்பெஹார் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கால்நடை கடத்தியதாகக் கூறி 19 வயது இளைஞரை சுட்டுக் கொன்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஆகஸ்ட் 2020, 11:58 am

PTI

மேற்குவங்கத்தின் கூச்பெஹார் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கால்நடை கடத்தியதாகக் கூறி 19 வயது இளைஞரை சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில்,  கூச்பெஹார் மாவட்டத்தின் துபங்கஞ்ச் கிராமத்தில் கால்நடை கடத்தல்காரர்களை கைது செய்ய பாதுகாப்புப் படையினர் ஞாயிறு இரவு ரோந்து சென்றனர்.

அப்போது கால்நடை கடத்தியதாக 19 வயது இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம் என கூறினார்.

இச்சம்பவம் குறித்து மேற்குவங்க அமைச்சர் ரவீந்திரநாத் கோஷ் கூறுகையில்,

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சுட்டு கொன்றது மனிதாபிமானமற்ற செயல், கால்நடையை திருடியிருந்தாலும் அவரை சுட்டுக் கொல்ல பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அதிகாரம் இல்லை என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.