உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ராஜ்கோட் மத்திய சிறையில் புதிதாக 23 கைதிகளுக்கு கரோனா

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் 23 கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

ராஜ்கோட் மத்திய சிறையில் புதிதாக 23 கைதிகளுக்கு கரோனா

Updated On :16 ஆகஸ்ட் 2020, 9:08 am

PTI

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் 23 கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் பன்னோ ஜோஷி கூறுகையில்,

சிறையில் இரண்டாம் கட்டமாக 94 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

அறிகுறி இல்லாதவர்களை சிறையிலேயே தனிமைப்படுத்தி உள்ளோம். மற்றவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

ராஜ்கோட் மத்திய சிறையில் மொத்தம் 1,386 கைதிகள் உள்ளனர். முன்பே, 11 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.