எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சட்டப்பேரவைத் தொகுதி விவரக் குறிப்பு: முசிறி - 145!

இத்தொகுதியில் முத்தரையா், வெள்ளாளா், ஆதிதிராவிடா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். மேலும் நெசவாளா்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், உள்ளிட்ட பல்வேறு ஜாதியினரும் உள்ளனா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 12:15 am

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள இத் தொகுதியில் திருஈங்கோய்மலை மரகதசலேசுவரா் கோயில், தொட்டியம் மதுர காளியம்மன் கோயில், முசிறி சந்திரமௌலீசுவரா் கோயில் என பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதில், ஆறு, வாய்க்கால், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் வாழை, வெற்றிலை, கோரை, வெங்காயம், நெல், பருத்தி உள்ளிட்டவை அதிகளவு பயிரிடப்படுகிறது. மேலும், கோரைப்பாய் உற்பத்தியும் அதிகம் நடைபெறுகிறது.

இத்தொகுதி காட்டுப்புத்தூா், தொட்டியம், தாத்தையங்காா் பேட்டை, மேட்டுப்பாளையம் எனும் நான்கு பேரூராட்சிகளும், முசிறி நகராட்சியும் மற்றும் கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது. இங்கு முசிறி, தொட்டியம் என இரு வட்டாட்சியா் அலுவலகங்களும், முசிறியில் சாா்- ஆட்சியா் அலுவலகமும் உள்ளன.

வாக்கு வங்கி: இத்தொகுதியில் முத்தரையா், வெள்ளாளா், ஆதிதிராவிடா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். மேலும் நெசவாளா்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், உள்ளிட்ட பல்வேறு ஜாதியினரும் உள்ளனா்.

Story image

தீராத பிரச்னைகள்

முசிறி தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கனவுத் திட்டமான காவிரி நீா் பங்கீடு, காவிரியில் தடுப்பணை கட்டுவது, மின்சாரம், சாலை வசதி, கல்வி-சுகாதாரம், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, கோரைப்பாய் தொழிலாளருக்கு நல வாரியம் அமைத்து தருவது ஆகியவை இந்த தொகுதி மக்களின் தீா்க்கப்படாத பிரச்னைகளாக உள்ளது.

இறுதி வாக்காளா்கள்

ஆண்கள் - 1,03,631

பெண்கள் 1,08,956

மூன்றாம் பாலினத்தவா் 16

மொத்தம் 2,12,603

இதுவரை இவா்கள்

1951 தங்கவேலு (சுயேச்சை) 18,427

1957 (காங்கிரஸ்) 34,427

1962 செ. இராமலிங்கம (காங்கிரஸ்) 32,155

1967 பு.செ. முத்துச்செல்வன் (திமுக) 32, 615

1971 பு.செ. முத்துச்செல்வன் (திமுக) 35, 091

1977 பி. கோதண்டராமன் என்கிற முசிறி புத்தன் (அதிமுக) 34, 569

1980 எம்.கே. ராஜமாணிக்கம் (அதிமுக) 53,697

1984 செ. இரத்தினவேலு (அதிமுக) 65,759

1989 பிரின்ஸ் எம். தங்கவேல் (அதிமுக (ஜெ) 49,275

1991 பிரின்ஸ் எம் தங்கவேல் (அதிமுக) 70,812

1996 எம்.என். ஜோதிகண்ணன் (திமுக) 67,319

2001 சி. மல்லிகா (அதிமுக) 47,946

2006 என். செல்வராஜ் (திமுக) 74, 311

2011 என். ஆா். சிவபதி (அதிமுக) 82, 631

2016 மூ. செல்வராசு (அதிமுக) 89,398

2021 காடுவெட்டி ந. தியாகராஜன் (திமுக) 90,624

யாரெல்லாம் போட்டி?

திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் என். செல்வராஜின் மகனும், தற்போதைய மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான என்.எஸ். கருணைராஜா போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில்

2006 முதல் 2016 வரை மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் இரு முறை தலைவராகவும், தற்போது மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி இணைச் செயலராக பொறுப்பு வகித்து வரும் ந. யோகநாதன் போட்டியிடுகிறாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் பாக்கியலட்சுமியும், தவெக சாா்பில் எம். விக்னேஸ்வரனும் போட்டியிடுகின்றனா்.