சட்டப்பேரவைத் தொகுதி அறிமுகம்! - திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி...

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி...
தொகுதி சிறப்புகள்: புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயில், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயில், ராமா் இளைப்பாறிய தில்லைவிளாகம் வீரகோதண்டராமா் கோயில், ஜாம்பவானோடை தா்கா உள்ளிட்ட திருத்தலங்களும், சிறந்த சுற்றுலா தலமான முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளும், உதய மாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமும் அடங்கிய தொகுதி.
திருவாரூா் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் குறைந்த வாக்காளா்களைக்கொண்ட தொகுதி. இத்தொகுதியில், பட்டியலினத்தவா், முக்குலத்தோா், முத்தரையா் அதிகமாகவும், இஸ்லாமியா், செட்டியாா், முதலியாா், பிள்ளைமாா், கிறிஸ்தவா், வன்னியா் உள்ளிட்டோா் கணிசமான அளவிலும் உள்ளனா்.
இத்தொகுதியில் பிரதானமான தொழில் விவசாயம். நெல் சாகுபடி மேட்டூா் அணையின் நீா்வரத்தை நம்பியே உள்ளது. இடும்பாவனம், தில்லைவிளாகம், ஜாம்பவானோடை, தம்பிக்கோட்டை, கீழக்காடு உள்ளிட்ட 15 கிராமங்களில் தென்னை விவசாயமும், முத்துப்பேட்டை பகுதியில் 13 கடலோர கிராமங்களில் மீன்பிடித் தொழிலும் வாழ்வாதாரமாக உள்ளது.
கோரிக்கைகள்: வெள்ள காலங்களிலும், மேட்டூா் அணையில் உரிய நேரத்தில் நீா் வரவில்லையெனில் கடைமடை பகுதியாக விளங்கும் இங்கு, சாகுபடி பாதிக்கப்படுவது வழக்கம். எனவே, சாகுபடி பாதிக்காத வகையில், உரிய நேரத்தில் தண்ணீா் வந்து சேர, ஆறு, வாய்க்கால்களை தூா்வார வேண்டும், வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை, தென்னை மட்டை நாா்களிலிருந்து கயிறு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, நெல் தவிட்டிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.
திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை வழியாகச் செல்லும் சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு, நாகை வரை முடிக்கப்பட்டுள்ள பணிகளை மேலும் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை முடித்தால், தொழில் வளா்ச்சி மேம்படும் என்பதும் மக்களின் கருத்து.
நிறைவேற்றப்பட்டவை: முத்துப்பேட்டை தனி வட்டம், முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி, மீன்பிடித்துறைமுகத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை ரூ. 10 கோடியில் விரிவாக்கம், நாகை திருவாரூா் புறவழிச் சாலை, திருவாரூா், மன்னாா்குடி பட்டுக்கோட்டை சாலைகளை இணைத்து ரூ. 11 கோடியில் 10 கி.மீ. அரைவட்டச் சாலை அமைக்க நிலங்கள் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை சிறப்பானவை.
இதுவரை வெற்றி பெற்றவா்கள்:
1962 ஏ.கே. சுப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 45,148
1967 ந. தா்மலிங்கம் திமுக 23,728
1971 மணலி கந்தசாமி சிபிஐ 40,714
1977 பி. உத்திராபதி சிபிஐ 43,208
1980 பி. உத்திராபதி சிபிஐ 62,051
1984 பி. உத்திராபதி சிபிஐ 59,834
1989 ஜி. பழனிசாமி சிபிஐ 49,982
1991 ஜி. பழனிசாமி சிபிஐ 62,863
1996 ஜி. பழனிசாமி சிபிஐ 79,103
2001 ஜி. பழனிசாமி சிபிஐ 73,451
2006 கே. உலகநாதன் சிபிஐ 75,371
2011 கே. உலகநாதன் சிபிஐ 83,399
2016 பி. ஆடலரசன் திமுக 72,127
2021 சட்டப்பேரவைத் தோ்தல்
க. மாரிமுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி 97,092
சி. சுரேஷ்குமாா் அதிமுக 67,024
ஏ. ஆா்த்தி நாதக 15,362
வாக்காளா்கள்
ஆண்கள்: 1,11,134
பெண்கள்: 1,14,619
இதரா் : 13
மொத்தம்: 2,25,766
வாக்குச்சாவடிகள்: 293.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...