அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருவனந்தபுரத்தில் கோயில்கள் திறப்பு: பக்தர்கள் வழிபாடு

ஆவணி மாத பிறப்பையொட்டி கேரளத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஆகஸ்ட் 2020, 8:08 am

DIN

ஆவணி மாத பிறப்பையொட்டி கேரளத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் அதிகரித்து வந்ததால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரட்ஙகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கேரளத்தில் கோயில் உள்ளிட்ட புனித தலங்கள் மூடப்பட்டன. இதனிடையே கேரள மாத பிறப்பான சிங்கம் மாத பிறப்பையொட்டி கோயில்களை திறக்க திருவாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி திருவனந்தபுரத்தில் இன்று முதல் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலும் இன்று திறக்கப்பட்டது. எனினும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடத்தப்படவில்லை. பக்தர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.