உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தற்கொலைக்கு முயன்ற ரஷ்ய அரசியல் தலைவர்

ரஷ்ய எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் அலெக்ஸி நவல்னி வியாழக்கிழமை காலை விஷம் குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image

ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர் அலெக்ஸி நவல்னி

Updated On :20 ஆகஸ்ட் 2020, 7:14 am

PTI

ரஷ்ய எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் அலெக்ஸி நவல்னி வியாழக்கிழமை காலை விஷம் குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் அதிபர் புடினின் அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவல்னி (வயது 44). இன்று காலை சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார். திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சூடான திரவத்தில் விஷம் கலந்து குடித்ததாக கூறினார்கள். அவர் இன்று காலை தேநீர் மட்டுமே அருந்தியதால், அதில் கலந்து குடித்திருக்கலாம் எனத் தெரிவித்தார். 

நவல்னி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் அறிக்கையை இணைத்து ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவல்னி ரஷ்ய அரசையும், அதிபரையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர். மேலும், இவர் பலமுறை ரஷ்ய அரசை விமர்சித்ததற்கு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.