இந்தியா-உஸ்பெகிஸ்தான் தலைவர்கள் ஆலோசனை
இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இணையவழியாக நடைபெற்றது.

இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இணையவழியாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் கூறுகையில்,
முதலாவது தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உஸ்பெகிஸ்தான் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் உடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. இக்கூட்டத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான உறவு மேலும் வலுவடையும் என கூறினார்.
இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தக வருவாயைக் கொண்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரண்டிலும் மருந்துவத்துறை ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
உஸ்பெகிஸ்தானில் முக்கிய இந்திய முதலீடுகளாக மருந்து, கேளிக்கை பூங்காக்கள், ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் சார்ந்து உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...