புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆக்லாந்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் ஆர்டெர்ன்

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போதைய எச்சரிக்கை நிலை-3 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தொடரும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று அறிவித்தார்.

News image

நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்

Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:01 am

ANI

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போதைய எச்சரிக்கை நிலை-3 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தொடரும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில்,

ஏற்கனவே, ஆகஸ்ட் 26 வரை ஆக்லாந்து நகரம் எச்சரிக்கை நிலை-3 இல் இருக்கின்றது. பள்ளிக் குழந்தைகள் வீட்டிலிருந்து இணையவழி மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் பிற பகுதிகளுக்கு எச்சரிக்கை நிலை-2 இல் உள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

எச்சரிக்கை நிலை 3-ன் கீழ், வணிக நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

ஆக்லாந்தில் சமூகத் தொற்று உள்ளதா என்பதை மறுஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு திங்கள்கிழமை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். 

மேலும், எச்சரிக்கை நிலை-2 மற்றும் அதற்கு மேற்பட்ட இடங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் முகமூடியை கட்டாயமாக அணிய வேண்டும்.

பொதுப் போக்குவரத்தில் விமானங்கள், பேருந்துகள், டாக்சிகள் என அனைத்தும் அடங்கும். குழந்தைகள் முகமூடி அணியத் தேவையில்லை. இந்த விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.