ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல கரோனா எதிர்மறை சான்று கட்டாயம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்பவர்கள் விமானம் கிளம்ப 96 மணிநேரத்திற்குள் பி.சிஆர். சோதனை செய்திருக்க வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்பவர்கள் விமானம் கிளம்ப 96 மணிநேரத்திற்குள் பி.சிஆர். சோதனை செய்திருக்க வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வலைதளத்தில் புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது, 12 வயதிற்கு மேல் உள்ள பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்ல பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது.

பயணிகள் தங்கள் பயண நேரத்திலிருந்து 96 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர். சோதனையை செய்திருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் எடுத்த பி.சி.ஆர். சோதனை ஏற்றுக் கொள்ளப்படாது. பி.சி.ஆர். சோதனையை இந்திய அரசு அனுமதித்த ஆய்வகத்தில் மட்டுமே எடுக்க வேண்டும். சோதனை முடிவில் கரோனா இல்லை என்று உறுதி செய்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com