ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 35 பேர் பலி
வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் 35 பேர் பலியாகினர், 76 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 35 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 35 பேர் பலி
வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் 35 பேர் பலியாகினர், 76 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
வெள்ளத்தால், இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர், 76 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண மருத்துவமனையின் தலைவர் அப்துல் காசிம் சாங்கின் தெரிவித்தார்.
இதுகுறித்து பர்வான் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் வாகிதா ஷாகர் கூறுகையில்,
நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் மாகாணத்தின் மத்திய பகுதி முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
கோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...