மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தல்: 50.53% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தலில் 50.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

News image
மத்திய காஷ்மீர் பகுதியில் வாக்களித்த வாக்காளர்.
Updated On :4 டிசம்பர் 2020, 1:34 pm

ANI

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தலில் 50.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில், 50.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் முதலாம் கட்ட தேர்தலில் 51.46 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 48.62 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.