மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

போராட்டத்திலிருந்து திரும்பிய 4 விவசாயிகள் விபத்தில் பலி

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிய 4 விவசாயிகள் இரு வேறு விபத்துகளில் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :15 டிசம்பர் 2020, 11:41 am

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிய 4 விவசாயிகள் இரு வேறு விபத்துகளில் பலியாகினர்.

ஹரியாணாவின் கர்னல் மாவட்டம் தாரோரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை டிராக்டர் மீது லாரி மோதியதில் பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு விவசாயிகள் பலியாகினர்.

மேலும் ஒரு விவசாயி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொஹாலி அருகே நடந்த மற்றொரு விபத்தில், லாரி மோதியதில் பஞ்சாப்பை சேர்ந்த தீப் சுங் மற்றும் சுக்தேவ் சிங் ஆகிய 2 விவசாயிகள் பலியாகினர்.

மேலும் 7 பேர் காயத்துடன் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்த விவசாயிகளை பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து நேரில் சந்தித்தார்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 20 நாள்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.