‘சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமில்லை’: கேரள முதல்வர்
கேரளத்தில் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமில்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கேரளத்தில் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமில்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
இதில், ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி விரிவான வெற்றியைப் பெற்றுள்ளது. இது, கேரள மக்களின் வெற்றி. இந்த தேர்தல் முடிவுகள் கேரளத்தை அழிக்க முயற்சிப்பவர்களுக்கான பதிலாக அமைந்துள்ளது. மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்தி கேரள அரசாங்கத்தை சீர்குலைக்க முயன்றவர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சந்தர்பவாத அரசியலுக்கு இடமில்லை என்பது தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு இடதுசாரிகளை கேவலப்படுத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தோல்வியடைந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக இடதுசாரி ஜனநாயக கூட்டணியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர். தவறான பிரசாரத்தை உணர்ந்து, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...