ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரகண்ட் முதல்வருக்கு கரோனா

உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்
Updated On :18 டிசம்பர் 2020, 10:01 am

ANI

உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,

கரோனா பரிசோசதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனத் தெரிவித்தார்.

இதற்குமுன் உத்தரகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா மற்றும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.