துபையிலிருந்து மதுரைக்கு கடத்தி வந்த ரூ.17.95 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சத்து 95 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள, 350 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
மர அறுவை இயந்திரத்தில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 350 கிராம் தங்கம்.
மர அறுவை இயந்திரத்தில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 350 கிராம் தங்கம்.
Updated on
1 min read

துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சத்து 95 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள, 350 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

துபையிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்கிழமை மதுரை வந்த பயணிகளை சோதனையிட்டனர். இதில் ராமேசுவரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டவந்த மர அறுவை இயந்திரத்தை கழற்றி சோதனையிட்டபோது அதில் 350 கிராம் தங்கம் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 17 லட்சத்து 95 ஆயிரத்து 850 ஆகும். தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் கடத்தி வந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com