கேரளத்தில் 2வது 100 நாள் திட்டம் அறிவிப்பு
கேரளத்திள் இரண்டாவது 100 நாள் செயல்திட்டத்தை ரூ. 10,000 கோடி மதிப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளத்திள் இரண்டாவது 100 நாள் செயல்திட்டம் ரூ. 10,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கரோனா தொற்று பரவலால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைப்பதற்கு கடந்த செப்டம்பர் மாதம் கேரளத்தில் 100 நாள் செயல்திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
அந்த செயல்திட்டம் முடிவடைந்த நிலையில் ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2வது 100 நாள் செயல்திட்டத்தை கேரள முதல்வர் அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
கேரளத்தில் 2வது 100 நாள் செயல்திட்டத்தில் ரூ. 10,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இடது ஜனநாயக முன்னணி அரசு அளித்த 600 வாக்குறுதியில் 570-யை நிறைவேற்றியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை 100 நாள் செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த இரண்டாம் கட்ட 100 நாள் செயல்திட்டத்தில், மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...