திருச்சி விமான நிலையத்தில் 798 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 798.5 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருச்சி விமான நிலையத்தில் 798.5 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமீபகாலமாக சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் தொடர்ச்சியாக கடத்தல் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணித்தவரை சோதனை செய்ததில், அவரது பையில் 798.5 கிராம் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் இருந்தது.
அந்த சங்கிலியில் மதிப்பு ரூ. 40.72 லட்சம் எனக் கணக்கீடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...