ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பனியம்பள்ளி பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இங்கு மேற்குவங்க மாநிலம் பார்கனஸமொக்னபுர் பகுதியை சேர்ந்த காசிம் மண்டல் என்பவருடைய மகன் ரெபியுல் மண்டல்(26) என்பவர் தங்கி இருந்தார். இவர் மீது கடந்த 16-4-2019 அன்று அதே பகுதியில் வசித்து வந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் புகார் அளித்தனர்.
அதில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்து பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்து. கடந்த 13-4-2019 அன்று அருகில் வசிக்கும் ரெபியுல் மண்டல் என்பவர் தங்களது வீட்டுக்கு வந்து மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.