சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக 2020-2021-ஆம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் முடிந்த அளவுக்கு கற்று வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று ஏற்கனவே கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதனையடுத்து, சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், அதற்கான முடிவுகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


