தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை

முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி வீட்டில் சென்னை போலீஸார்

News image
Updated On :31 ஜனவரி 2020, 6:50 am

DIN


கரூர்: முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான, திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி வீட்டில் சென்னை போலீஸார் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னையிலிருந்து டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர் உட்பட 15க்கும் மேற்பட்ட போலீஸார், கரூர் அடுத்த மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரம்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ணபுறத்திலுள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் டெக்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Story image

அதிமுகவில் இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் இருந்தது. 

Story image

மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தற்போது இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story image

கரூர் மட்டுமல்லாது திருவண்ணாமலையில் உள்ள செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.