தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து 25 பேர் காயம்
தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.


தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக பெத்தநாயக்கன்பாளையம் டாட்டா ஏஸ் ஆட்டோவில் 25 பேர் பயணித்தனர். ஊனத்தூர் அடுத்து வேப்பனத்தம் சாலையில் பொன்னுசாமி கவுண்டர் தோட்டம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளர் கே.குமரவேல்பாண்டியன் ஓட்டுநர் மருதமுத்து (38) கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காயம் அடைந்த அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...