லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கட்டாய வசூல் செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

காரைக்குடியில் மகளிர் சுய உதவிக் குமுவினர் தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை கரோனா பொது முடக்க காலத்தில் கட்டாய வசூலில் ஈடுபட்டதால் அந்நிறுவன கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

News image
கட்டாய வசூல் செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Updated On :24 ஜூலை 2020, 9:45 am

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை கரோனா பொது முடக்க காலத்தில் கட்டாய வசூலில் ஈடுபட்டதால் காரைக்குடி நூறடிச்சாலையில் உள்ள  அந்நிறுவன கிளை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்ததும் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனை நடத்தினர்.

சம்மந்தப்பட்ட நிதி நிறுவன கிளை மேலாளர், ஊழியர்கள் கரோனா பொது முடக்க காலத்தில் எவ்வித கடன் வசூலும் செய்யக் கூடாது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டம் கூட்டவோ கடன் தொகை கட்டச் சொல்லி மிரட்டவோ கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவையும், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவிப்பை ஏற்று நடக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை வசூலை நிறுத்த வேண்டும் என்றும் காவல் துறையினர் நிதி நிறுவனத்தினரிடம் தெரிவித்தனர்.

இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மகளிர் குழுக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.