வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.

News image
சாத்தான்குளம் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated On :24 ஜூலை 2020, 7:50 am

DIN

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் முத்துராஜா, தாமஸ் ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஜ தரப்பில் வழக்குரைஞர் வாதிடுகையில்,  இந்த வழக்கில் கைதானவர்களை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. இவர்களை ஜாமீனில் செல்ல அனுமதித்தால், சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவலர்கள் முத்துராஜா, தாமஸ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.