மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை பிரதிநிதியிடம் பேசினார் ராஜ்நாத் சிங்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு துறை பிரதிநிதியான லெப்டினென்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.

News image
இஸ்ரேல் பாதுகாப்பு துறை பிரதிநிதியிடம் பேசினார் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
Updated On :24 ஜூலை 2020, 11:58 am

PTI

இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு துறை பிரதிநிதியான லெப்டினென்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.

இதைப்பற்றி அரசு வட்டாரங்கள் தெரிவித்தாவது, “பேச்சு வார்த்தையில் முக்கியமாக லடாக்கில் உள்ள சீன-இந்தியா இடையேயான பிரச்சனைப் பற்றி பேசினர். 

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பாதுகாப்புக் கொள்முதல் திட்டங்கள் குறித்தும், இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்தப் பாதுகாப்பு உறவை விரிவு படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.

பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியா தொடங்கிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து சிங் காண்ட்ஸுக்கு விளக்கமளித்ததாகவும், இந்திய நிறுவனங்களுடன் ஆயுதங்கள் மற்றும் இராணுவ வன்பொருள்களின் கூட்டு வளர்ச்சியில் இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனங்களின் அதிக பங்களிப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும்” கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.