47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒகேனக்கல்: நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Updated On :27 ஜூலை 2020, 10:19 am

DIN

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாண்டியா, சாம்ராஜ் நகர் மற்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 7,200  கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில், திங்கட்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 7,700 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருந்தது.

மேலும், 2 மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.