பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கரோனா பாதிப்பு: முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிரிழப்பு

முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News image
கோப்புப் படம்
Updated On :17 ஜூன் 2020, 6:30 am

DIN

சென்னை: முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கரோனா தொற்று பாதிப்பால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிகத்தில் மற்ற மாவட்டங்களை விட மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில் தான் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அலுவலக தனிச்செயலர் தாமோதரனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை தனிச்செயலர் தாமோதரன் உயிரிழந்தார். 

கரோனா தொற்று பாதிப்புக்கு சென்னையில் புதன்கிழமை மட்டும் 28 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.