ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து கடந்த சனிக்கிழமை 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுகிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. இதனையடுத்து, படகு உரிமையாளர் மாயமான விசைப்படகு மற்றும் படகில் சென்ற மலர் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கர்(43), ஆனந்த் (எ) சுஜிந்திரா(19), ஜேசு(60) மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தொடர் போராட்டங்களை மேற்க்கொண்டு வருகின்றனர்.