களியக்காவிளை சோதனை சாவடியில் அடிப்படை வசதிகள் கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்: எம்.பி, 3 எம்.எல்.ஏ.க்கள் கைது

களியக்காவிளை சோதனைச் சாவடியில் பல மணி நேரம் காக்க வைக்கப்படும் அவலத்துக்கு தீர்வு காண கேட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் களியக்காவிளையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெ
களியக்காவிளை சோதனை சாவடியில் அடிப்படை வசதிகள் கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்: எம்.பி, 3 எம்.எல்.ஏ.க்கள் கைது

களியக்காவிளை: கரோனா பரவல் காரணமாக வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து கேரளம் வந்து அங்கிருந்து குமரி மாவட்டம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) கிடைக்காததால் தமிழக எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் பல மணி நேரம் காக்க வைக்கப்படும் அவலத்துக்கு தீர்வு காண கேட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் களியக்காவிளையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் எஸ். ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயல் தலைவரும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான ஹெச். வசந்தகுமார் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ். விஜயதரணி, குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். அதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து எம்.பி., 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com