இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 366 -ஆக உயர்வு

புதுச்சேரியில் மேலும் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 366 -ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2020, 7:25 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 366 -ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் எஸ். மோகன்குமார் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

புதுச்சேரியில் சனிக்கிழமை நிலவரப்படி 339 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 7 பேர் உயிரிழந்திந்திருந்தனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் 30 பேரும், ஏனாமில் ஒருவர் என 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 366 -ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 140 -ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜிப்மரில் சிகிச்சைப் பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 64 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 -ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து இறந்தவரின் உடலை அரசு விதிமுறைகளின்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கரோா பரிசோதனை செய்யப்பட்ட 12,409 பேர்களில் 11,866 பேருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. 190 பேருக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பரிசோதிக்கப்பட்ட 235 பேரில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.