நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடிபோதையில் குடும்பத்தாரிடையே தகராறு செய்த மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் மகன் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். வேதாரண்யத்தை அடுத்துள்ளது சிறுதலைக்காடு மீனவ கிராமம். இங்கு வசித்தவர் மா.சிவசுந்தரம் (55) மீனவர். இவரது 3-ஆவது மனைவி அங்காளம்மை (45). இவர்களுக்கு 3 மகன் 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
குடிபழக்கமுள்ள சிவசுந்தரம் அடிக்கடி குடும்பத்தாரிடையே தகராறில் ஈடுபடுவாராம். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தனித்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் வந்த சிவசுந்தரம் மனைவி மகன்களிடம் தகராறு செய்தாராம். இதையடுத்து அவரை வீட்டுக்குள் கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை கிராமத்தினர் மூலம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று வாய்மேடு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி அங்காளம்மை, 2 -ஆவது மகன் ஞானபிரகாசம் (25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


