வாழப்பாடி பகுதியில் 5 பேருக்கு கரோனா: வீடுவீடாகச் சென்று சுகாதாரக்குழு ஆய்வு
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து திரும்பிய 5 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து திரும்பிய 5 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த கிராமம் முழுவதும் சுகாதாரக்குழுவினர் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவோர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கண்டறிந்து, அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில், வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான சுகாதார குழுவினர் ஈடுபட்டுள்ளனர். திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து வாழப்பாடி பகுதிக்கு வந்திருந்த 11 பேருக்கு சளி மாதிரி எடுத்து, கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து வாழப்பாடி அடுத்த தேக்கல்பட்டி கிராமத்திற்கு திரும்பிய 33 வயது இளைஞர் ஒருவருக்கும், மத்திய பிரதேசத்தில் இருந்து வி.மன்னார்பாளையம் கிராமத்திற்கு திரும்பிய 40 வயது லாரி ஓட்டுனர் ஒருவருக்கும், ஹரியானா மாநிலத்தில் இருந்து சந்திரபிள்ளை வலசு கிராமத்திற்கு திரும்பிய, 20 வயது லாரி ஓட்டுநர் ஒருவருக்கும், இதே கிராமத்தில், சென்னை தாம்பரத்தில் இருந்து திரும்பிய 34 வயது பொறியாளர் ஒருவருக்கும், இதே கிராமத்திற்கு கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த 24 வயது லாரி ஓட்டுனர் ஒருவர் உட்பட 5 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
ஐந்து பேரையும், பேளூர் வட்டார மருத்துவக்குழுவினர் பாதுகாப்பாக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாழப்பாடி அடுத்த சந்திரபிள்ளைவலசு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் கரோனா தோற்று உறுதியானதால், அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ள பேளூர் வட்டார சுகாதாரக்குழுவினர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இவர்களது வீடுகளைச் சுற்றி வசித்து வருபவர்கள், வீடுகள் தோறும் யாருக்கேனும் சளி, இருமல், தும்மல் உள்ளிட்ட கரோனா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா என சோதித்து கள ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கிராமங்களுக்கு வருபவர்கள் குறித்து, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். என பேளூர் வட்டார சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...