த.மா.கா சார்பில் இடுகாட்டு பணியாளர்களுக்கு நிவாரணம்

சிதம்பரம் நகரில் கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இடுகாட்டு பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
த.மா.கா சார்பில் இடுகாட்டு பணியாளர்களுக்கு நிவாரணம்
Published on
Updated on
1 min read

சிதம்பரம் நகரில் கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இடுகாட்டு பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இடுகாட்டு பணியாளர்கள் 150 நபர்களுக்கு மாவட்ட மகளிரணி சார்பில் மேலவீதி அண்ணா சிலை அருகில் உள்ள நகர தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி மாவட்ட மகளிரணி தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார்.

 மாவட்டச் செயலாளர் தில்லை செல்வி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கோ.ஜனகம், நகர செயலாளர் ருக்குமணி, அழகர் மாலா, ராதா, மாலா மாவட்ட இளைஞரணி செயலாளர் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர்.மக்கின் வரவேற்றார். சிதம்பரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ். கார்த்திக்கேயன் கலந்துகொண்டு நிவாரணப்பொருள்களை வழங்கி சிதம்பரம் நகரில் நோய்த் தொற்று பரவாமல் இருப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கே.நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த் தொண்டரணி தலைவர் தில்லை கோ.குமார், எஸ்.கே வைத்தி, பாபு.சந்திரசேகர் செயலாளர் பாண்டு (எ) பாலசந்தர், நகர நிர்வாகிகள் பொருளாளர் எஸ் எஸ் நடராஜன், ஆர்வி. சின்ராஜ், இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர்கள் எம் கே பாலா, சேதுமாதவன், மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி ராஜ்குமார், உட்பட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

நகர மகளிரணி தலைவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மீனா.செல்வம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com