உலகளவில் 92 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 92 லட்சத்தைத் நெருங்கியுள்ளது.


உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 92 லட்சத்தைத் நெருங்கியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 213 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணிந்த போதிலும், பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 92 லட்சத்தைத் நெருங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் இந்த வைரஸால் 91 லட்சத்து 92 ஆயிரத்து 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 லட்சத்து 78 ஆயிரத்து 756 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். அதில் 57 ஆயிரத்து 905 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் கரோனாவில் இருந்து இதுவைர 49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். எனினும் இந்த வைரஸுக்கு 4 லட்சத்து 74 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அங்கு 2,388,153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122,610 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...